கலைஞர் எவ்ளோ பெரிய தலைவர்? இந்திய அரசியலிலே ஒரு 50 வருஷம் தன்னை சுற்றி சுழல வைத்த பெரிய தலைவர். அவர் எப்படி வெற்றி பெற்றார். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை 10 கட்சிகளை சேர்த்து கூட்டணி வைத்து தான் வீழ்ததினார்.
இவர்கள் இரண்டு பேருமே கூட்டணியை அமைத்து தான் ஒருத்தரை ஒருத்தர் வீழ்த்தி இருக்கிறார்கள். 2016 தேர்தலை விட்டு விடுங்கள். அப்போது அதிமுகவுடன் சின்னச் சின்ன கட்சிகள் கூட்டணியில் இருந்தது. திமுகவை வீழ்த்துவது உங்களது நோக்கம் என்கிறீர்கள். என்னுடைய எதிரி திமுக என்கிறீர்கள். திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்கிறீர்கள்.
வரலாறில் இருந்து பாடம் கற்க மறுக்கிறவர்கள் தவறுகளை திரும்பத் திரும்ப செய்வார்கள். வரலாறில் இருந்து தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். தனியாக திமுகவை ஆனானப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதாவுமே வீழ்த்த முடியவில்லை என்கிறபோது விஜய் மட்டும் எப்படி வீழ்த்துவார்? வீழ்த்த வேண்டும் என்கிற முக்கிய விஷயத்தில் கூட்டணி இல்லாமல் விஜயால் அதை சாத்தியப்படுத்தவே முடியாது.