பாஜகவினருக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்ததே அண்ணாமலைதான்..! உள்ளிருந்து சுத்துப்போட்ட அந்த சமூகம்..?

Published : Sep 15, 2025, 06:51 PM IST

அண்ணாமலைக்கு ஒரு முக்கிய பதவி தர இருக்கிறார்கள். அதுவரை அவர் பொறுத்து இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவினுடைய இஷ்டம். நைனார் நாகேந்திரன் அணுகுமுறை என்பது அரசியல் அணுகுமுறை.

PREV
15

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த ஏப்ரல் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நீக்கத்தின் பின்னணியில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை, சாதிய சமநிலை முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டன. இந்நிலையில் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகப்போவதாகவும், அவரை பாஜக நீக்க உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகையில். ‘‘அண்ணாமலை ரொம்பவே பரபரப்பாக, வேகமாக செயல்பட்டார். பாஜக படிப்படியாக வளரும் நினைத்தது’’ என இப்போது பேட்டி கொடுத்த துக்ளக் குருமூர்த்திதான் முன்பு ‘‘ அண்ணாமலையோட வேகம்தான் இந்த பாஜகவை உயர்த்தியிருக்கிறது. அவரது தியாகம்தான் உயர்த்தும்’’ என்று சொன்னார். பிராமணர்களை அடியோடு ஒழித்து, பெரியார் பாணியில், பெரியார் இயக்கங்கள் செய்யாததை பாஜகவில் செய்தார் அண்ணாமலை. ஒரு பிராமணரைக்கூட அந்த கட்சி ஆபீஸ் உள்ளே விடாமல் துரத்தி அடித்து, அவர்கள் ஓட ஓட விரட்டியவர் அண்ணாமலை. அண்ணாமலை வெர்சஸ் பிராமண பார்ட்டிகள் என்று இருந்ததை ஒழித்துக்கட்டினார்.

25

பிராமணர்களை மட்டும் இல்லை, நிர்மலா சீதாரமனை மக்களிடம் வராதீர்கள். எங்கேயாவது போய் அரசியல் செய்து டெல்லியில் இருந்து விடுங்கள் என அண்ணாமலை ஒழித்து கட்டி விட்டார். அண்ணாமலையின் சாதனைகளில் இது முக்கியமானது. இதில் இன்னொரு விஷயம் துக்ளக் ஆசிரியரை பொறுத்தவரை ஒரு பவர் ஏஜென்ட். இதே குருமூர்த்தி தான் ஒரு டிவிக்கு பேட்டி கொடுக்கும் போது ‘‘அண்ணாமலை மாதிரி ஒரு ஆள் கிடையாது. அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு காத்திருக்கிறது’’ என்று சொன்ன அதே துக்ளக் குருமூர்த்தி தான் இப்போது பேட்டி கொடுக்கையில் ‘‘அண்ணாமலை வேகமாக செயல்படுகிறார். அதி வேகமாக போகிறார்’’ என்கிறார்.

முன்பு. ‘‘இவர்கள் எங்கே போய் விடுவார்கள்? இதோ அதுவரை போய்விட்டு வருவார்கள்’’ என்கிற நிலைமையில் தான் பாஜக கட்சி இருந்தது. பீச் குதிரையாக இருந்த பாஜகவை அண்ணாமலை ரேஸ் குதிரையாக மாற்றியவுடன் பிராமணர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அண்ணாமலையை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் நேரடியாக மோடி, அமித் ஷாவின் கைக்கு சென்று விட்டார். மோடி, அமித் ஷாவுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது எந்த மரியாதையும் கிடையாது. காரணம் ரஜினியை கூட்டி வருவேன் என்று ஏமாற்றி விட்டார். அதன் பிறகு அவர் மீது இருந்த மரியாதை அமித் ஷாவுக்கு முடிந்து போய்விட்டது.

35

பாஜகவை முடித்து விட்டதே துக்ளக் குருமூர்த்திதான். இப்போது பாஜகவை முடிக்கப் போவதும் அவர்தான். அவரை எல்லாம் அரசியல் செய்ய விடாமல் துரத்தியவர் அண்ணாமலை. அந்த கும்பலை அடித்து காலி செய்து விட்டார். எஸ்.வி.சேகர் ஒரு பக்கம், குருமூர்த்தி ஒரு பக்கம், கேடி.ராகவன் ஒரு பக்கம் என இவர்கள் செய்த அட்டகாசங்கள், அநியாயங்கள் லாபி செய்த விவகாரம் என மொத்தமாக முடித்து விட்டார் அண்ணாமலை. அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை கூட்டத்தை காட்டி விட்டார். ‘‘ நமக்கு இவ்வளவு கூட்டம் இருக்கிறதா?’’ என்று அமித் ஷாவால் ஜீரணிக்க முடியவில்லை.

அண்ணாமலை, அமித்ஷாவுடன் நெருங்குவதை இவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. பல வித்தைகள் அண்ணாமலைக்கு தெரியும். பிராமின் பார்ட்டிகளுக்கு அது தெரியாது. எச்.ராஜாவை எல்லாம் வாயை பிளந்து கொண்டு பார்க்க வைத்தார். இப்போது உள்ள தமிழக பாஜககாரர்களுக்கு அண்ணாமலைதான் அரசியல் கற்றுக் கொடுத்திருக்கிறார். அப்போது அண்ணாமலை இயக்க முடியவில்லை. இப்போது பிராமணர் கூட்டம் அண்ணாமலையை கருவறுக்கப்பார்க்கிறது. இப்போது எல்லோரும் சேர்ந்து அண்ணாமலை பழிவாங்கத் துடிக்கிறார்கள்’’ என்கிறார்.

45

இந்த விவகாரம் குறித்து டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ‘‘அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தார். இளைஞர்கள் இடையே ‘என் மண்.. என் மக்கள்’ யாத்திரை மூலமாக அவருடைய பயணம் வெற்றிகரமாக இருந்தது. அவர் படித்தவர், விஷயத்தை புரிந்து கொண்டவர். அதிகாரியாக தான் அரசியல்வாதியாக நுழைந்தாரே தவிர, அவர் நரேந்திர மோடி என்ற ஒரு நிழலில் வளர்ந்தவர். மத்திய பாஜக ஒரு மாநிலத்திற்கு மூன்று வருடம் முடிந்தபின் தலைவரை மாற்றி விடுவார்கள். அந்த ரீதியில்தான் அண்ணாமலையை மாற்றினார்கள்.

நைனார் நாகேந்திரன் மத்திய பாஜக தலைமையால் அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டார். காரணம் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேச ஆரம்பித்தது மத்திய பாஜகவிற்கு பிடிக்கவில்லை. அண்ணாமலையின் வீச்சிக்கு அதுதான் காரணம். அவர் எடப்பாடி பழனிசாமியை தன்னிச்சையாக தனிப்பட்ட முறையில் தாக்கினார். அவர் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டு அண்ணாமலையினுடைய பேச்சு. திமுக ஃபைல்ஸ் வெளியிட்டதெல்லாம் மத்திய அரசாங்கத்தின் உளவுத்துறை மூலமாக அவருக்கு கொடுக்கப்பட்டது. அண்ணாமலையை பாஜக இலங்கைக்கு அனுப்பி வைத்தது, யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தது, லண்டனுக்கு அனுப்பி வைத்தது.

55

பாஜக பொது குழுவில் தேசிய அரசியல் நிலைமையை பற்றி மூன்று பக்க அரசியல் தீர்மானத்தை வழிமொழிந்தார் அண்ணாமலை. முன்மொழிந்தது யோகி ஆதித்யாநாத். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். பாஜகவில் ஜெபி நட்டாவுக்கு அடுத்து வரக்கூடிய தலைவராக கண்டிப்பாக அண்ணாமலைக்கு ஒரு முக்கிய பதவி தர இருக்கிறார்கள். அதுவரை அவர் பொறுத்து இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவினுடைய இஷ்டம். நைனார் நாகேந்திரன் அணுகுமுறை என்பது அரசியல் அணுகுமுறை.

அண்ணாமலை பாஜகவை தமிழ்நாட்டில் பிரமாதமாக கொண்டு வந்தார். 18% கொண்டு வந்த பெருமை அண்ணாமலைக்கு உண்டு அதே மாதிரி தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் போன்றவர்கள் எல்லாம் காத்திருந்து பதவிகளை பெற்றார்கள். சிபி ராதாகிருஷ்ணன் கூட தமிழக பாஜக தலைவராக இருந்தவர்தான். அவர் பொறுத்து இருந்தார். அவருக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுக்கப்பட்டது. ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் ஆனார். ஆக மொத்தம் அண்ணாமலை பொறுமையுடன் காத்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு மாபெரும் பதவி கிடைக்கும்’’ என்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories