சமீபத்தில், ‘‘உச்சத்தை விட்டுவிட்டு யார் வர சொன்னார்கள்? என் அன்புச் சகோதரர் அஜித்தும், ஐயா ரஜினிகாந்தும் தங்கள் புகழை விளம்பரமாக்க விரும்பவில்லை. 1.5 மணி நேரம் ஆனாலும், காகிதத்தை பார்க்காமல் பேசுவார் ஐயா எம்.ஜி.ஆர். போலவே ஐயா விஜயகாந்த் மனதில் இருந்து மக்கள் மொழியில் பேசுவார். ஆனால் தம்பி...” என கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான்.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் சீமானின் பேச்சு குறித்து, ‘‘விஜய்யை ஶ்ரீமான் (சீமான்) எவ்வளவு திட்டினாலும், அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை. இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி, தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.
இந்த சாக்கடையில் கால் வைக்காமல்.. தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது. 15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயசு பெருசு. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள். விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்புவரை பாசம் பொழிந்த பச்சோந்தி.. தற்போது நிறம் மாறியுள்ளது.