பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும், கட்சியின் செயல்தலைவரான அன்புமணிக்கு இடையே நீண்ட காலமாக நடைபெறும் அதிகார மோதல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2024 டிசம்பர் முதல் தொடர்ந்து வரும் இந்த மோதல் பாமகவை நிலைகுலைய வைத்துள்ளது.மாம்பழ சின்னத்தின் உரிமை கூட சந்தேகத்திற்குரியதாகி வருகிறது.மோதலின் முக்கிய
புதுச்சேரியில் பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் - அன்புமணி இடையே முதல் பகிரங்க மோதல் வெடித்தது. அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து செயல்தலைவராக இறக்கம் செய்தார் ராமதாஸ்.