நடிகை த்ரிஷா தான் விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து, எங்கே செல்கிறேன் என்று கேட்டிருந்தார். அதற்கு பிரபலங்களும், ரசிகர்களும் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகிறார்கள்.
‘‘எங்கே போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டுவிட்டு துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்திருக்கலாம். இல்லை என்றால் வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லலாம். அது எல்லாம் இருக்கட்டும் த்ரிஷா, இந்த போட்டோவை எடுத்தது யாரென்று சொல்லுங்கள். அதை தெரிந்து கொள்ளத் தான் ஆவலாக இருக்கிறோம்’’ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.