TN Assembly 2023: கொடநாடு சர்ச்சை முதல் ஆளுநரே வெளியேறு வரை.. சட்டப்பேரவையில் நடந்த தரமான 10 சம்பவங்கள் இதோ!!

First Published Jan 9, 2023, 7:21 PM IST

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதலாகி பேசுபொருளாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த (2023) ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். காலை 10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரைக்காக கூடியது. சட்டமன்றத்திற்குள் ஆளுநர் வந்தபோது மற்றும் அதன் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என முழக்கம் எழுப்பினர். என் இனிய சகோதர, சகோதரிகளே புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் எனக் கூறி உரையைத் தொடங்கினார் ஆளுநர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரிசையில் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்ததாக 10-வது இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ்,இபிஎஸ் இருவருக்கும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இருவரும் எதுவும் பேசாமல், முகத்தில் இறுக்கத்துடனே இருவரும் காணப்பட்டனர்.

ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல், சமூகநீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது உள்ளிட்ட வார்த்தைகள் இருந்தபோதும் அதனை தவிர்த்துவிட்டார். ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்தபோது இந்த வார்த்தைகள் இடம்பெற்றன.

ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியவாறு பேரவையின் மையப் பகுதிக்கு வந்து கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க..TN Assembly 2023 : உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தேசிய கீதம் இசைக்கும் முன்பு பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, கொடநாடு எஸ்டேட் சாதாரண இடம் அல்ல என்று எதிர்க்கட்சித்தலைவர் மறந்திற கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அங்கு வசித்திருக்கிறார் என்று கொடநாடு சம்பவம் பற்றி முதல்வர் ஸ்டாலின் கூற, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையில் இருந்து வெளியேறினார்.

அரசாங்கத்தை பெரிதும் புகழ்ந்த வார்த்தைகளையே ஆளுநர் தவிர்த்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரம் விளக்கமளித்துள்ளது. மேலும் அவை விதிகளை மீறவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..தமிழகத்தின் தலைமகன் பொய் சொல்ல முடியுமா? எல்லாமே அவங்க நாடகம்.! திமுகவை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை

click me!