தமிழ்த் தாய் விருது 2023... திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்பு - பாஜக தலைவர் அண்ணாமலை விருது வழங்கி கெளரவித்தார்

Published : Jan 06, 2023, 10:13 AM IST

சென்னையில் நடைபெற்ற தமிழ்த் தாய் விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருதுகளை வழங்கினார்.

PREV
18
தமிழ்த் தாய் விருது 2023... திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்பு - பாஜக தலைவர் அண்ணாமலை விருது வழங்கி கெளரவித்தார்

தமிழ் திரை உலகின் ஜாம்பவான்களான பாக்யராஜ், ரவி கே சந்திரன், யார் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், தங்கள் சிந்தனைகளை குறும்படமாக வெளியிட்டு திரை உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்த் தாய் விருது வழங்கி பாஜக கௌரவித்துள்ளது. 

28

சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த குறும்படத்திற்கு தமிழ்த் தாய் விருதுகள் வழங்கப்பட்டது. 

38

இதற்கான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிரபலங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

48

இதில் சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்ட 10 குறும் படங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்... வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை என்ற துறை எதற்காக? திமுக அரசை விளாசும் அண்ணாமலை!!

58

அதேபோல் பிரதமர் மோடியின் நலத்திட்ட உதவிகளை விவரிக்கும் மூன்று குறும் படங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

68

தமிழக பாஜக கலை கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா இந்த விழாவை தலைமை ஏற்று நடத்தியுள்ளார். அவருக்கு அண்ணாமலை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

78

புகழ்பெற்ற பாடகி சுசீலா, சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், திரைப்படக் கலைஞர்கள் வெண்ணிற ஆடை நிர்மலா, ராதா, சச்சு, ராஜஸ்ரீ, கோவை சரளா, கஸ்தூரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, தொழில்நுட்பக் கலைஞர் ராமலிங்க மேஸ்திரி உள்பட ஏராளமானோர் தமிழ்த் தாய் விருது 2023 விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

88

தமிழ்த் தாய் விருது விழாவில் எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் அண்ணாமலை.

இதையும் படியுங்கள்... BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

Read more Photos on
click me!

Recommended Stories