அமைச்சராக பொறுப்பேற்றதும்... உதயநிதி ஸ்டாலின் செய்யப்போகும் முதல் வேலை இதுதானாம்! வெளியான தகவல்

First Published | Dec 13, 2022, 12:46 PM IST

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கலந்துகொள்ள உள்ள முதல் பிரம்மாண்ட நிகழ்ச்சி குறித்தும் ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தற்போது அரசியலில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது தான் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 14-ந் தேதி அதாவது நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... டிச.14 அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை!!

Tap to resize

முதன்முறையாக அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதிக்கு திட்ட அமலாக்கத்துறை மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கலந்துகொள்ள உள்ள முதல் பிரம்மாண்ட நிகழ்ச்சி குறித்தும் ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.

அதன்படி உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் வருகிற டிசம்பர் 15-ந் தேதி தொடங்க உள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதில் 48 நாடுகளைச் சேர்ந்த 107 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்... ஓ2 முதல் கார்கி வரை... 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள் என்னென்ன?

Latest Videos

click me!