சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இது குறித்து, வியாபாரி பாமாயில் பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் மோனோகிளிசரைடுகள், அசிட்டிக் அமிலம் மற்றும் எஸ்டர்கள், பாமாயில் பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் பொருட்களை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக போலேபாபா பால்பண்ணைக்கு வழங்கி வந்தார். தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு நெட்வொர்க் மூலம் விநியோகிக்கப்பட்ட இந்த இரசாயனங்கள், அஜய் குமாரின் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டு, பால் உற்பத்தி பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டன.
தூய நெய்போன்று நறுமணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாமாயிலை ரசாயனங்களுடன் கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட கலப்பட நெய், வைஷ்ணவி, ஏ.ஆர். டெய்ரி என்ற பிராண்ட் பெயர்களில் விநியோகிக்கப்பட்டு, பின்னர் புனித திருப்பதி லட்டுகளில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பிரபலமான திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை பாமாயில் மற்றும் ரசாயன சேர்க்கைகளுடன் கலக்கப்பட்டிருப்பதை சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் கண்டறிந்துள்ளது.