இன்னும் என்னை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான அடையாளத்துக்குள் முடக்கப் பார்க்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்பேராளுமை விருது வழங்கும் விழா நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தொல். திருமாவளவன், ‘‘இன்னும் என்னை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான அடையாளத்துக்குள் முடக்கப் பார்க்கிறார்.அது ஒரு சாதியவாத அரசியல். நாம் பேசுவது சாதி ஒழிப்பு அரசியல். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. நாம் ஒரு அடையாளத்டை பெற்றிருக்கிறோம் என்பது உண்மைடான். ஆனால், அந்த அடையாளத்தை சிதைக்க வேண்டும் என்று போராடுகிறோம். அதுவும் உண்மைதான்.அதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நமடு கொள்கைப்பகைவர்கள் நம்மை அந்த அடையாளத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் நிறுத்தி தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள்.