திமுக இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய முதல்வர் மு.கஸ்டாலின், பேசும்போது, மகன் உயதயநிதியை போற்றிப் புகழ்ந்தார்.
ஸ்டாலின் பேசுகையில், ‘‘உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் விரும்பிய அறிவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள இளைஞரணி செயலாளர், கொள்கை இளவல் தம்பி உதயநிதி அவர்களையும், அவருக்கு துணை இருக்க கூடிய இளைஞரணி அன்பர்களையும் பாராட்டுகிறேன். தலைமை கழகத்தின் சார்பில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். கடந்த ஒரு மாத காலமாக இந்த அறிவு திருவிழாவுக்கான பணிகளை தம்பி உதயநிதி ஸ்டாலின் மும்பரமாக ஈடுபட்டு அந்த பணிகளில் அவர் எந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முழுமையாக செயல்பட்டு செயல்படுத்தி வருகிறார் என்பதை முரசொலி செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.