தவெக தலைவர் விஜய் ஏன் செய்தியாளர்களை சந்தித்துப்பேசுவதில்லை என எதிர் கட்சிகள், விமர்சகர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறனர். இந்நிலையில் விஜய் ஏன் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் எனக் கேட்டு எப்போது சந்திப்பார் என அதற்கான பதிலையும் அளித்துள்ளார் தவெக நிர்வாகி ஒருவர்.
செய்தியாளர்களை விஜய் ஏன் சந்திக்க மறுக்கிறார்? என தவெக நிர்வாகியிடம் கேட்டதற்கு, ‘‘விஜய் செய்தியாளர்களை ஏன் சந்திக்க வேண்டும்? நீங்கள் விஜயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கவேண்டியது தானே. ஆளும் கட்சியை பார்த்துக் கேட்க வேண்டியதுதானே. அவர்களிடம் கேட்பதற்கு எத்தனை கேள்விகள் இருக்கிறது. அனைத்துப் பெண்களுக்கும் ஏன் ஆயிரம் ரூபாய் கொடுப்படவில்லை. கல்விக் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று நீங்க சொன்னீங்களே தள்ளுபடி செய்தீர்களா? பழைய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் நடைமுறை படுத்துவோம் என்று சொன்னார்கள... ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று யாராவது கேட்டீர்களா? 1500 நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா ஸ்டாலின் அவர்களே கரூருக்கு இரவோடு இரவாக நீங்க போறீங்க. பரந்தூரில் அந்த விவசாயிகளை ஏன் பார்க்க மாட்டேங்கறீங்கன்னு கேட்டீங்களா?