பதவியை ராஜினாமா செய்யும் துரைமுருகன்..? அடுத்த பொதுச்செயலாளர் இவரா..? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்..!

Published : Nov 08, 2025, 06:44 PM IST

திமுகவில் ஏழு பேர் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்கள். இனி 9 பேர் வரை அந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கலாம் என்று கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV
13

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. நீர்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் துரைமுருகன் 1938-இல் பிறந்தவர் என்பதால், 87 வயதைத் தாண்டியுள்ளார். உடல்நலக் குறைவுகள், வயது மூப்பின் காரணமாக அவர் தனது கட்சி பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

23

துரைமுருகன் ராஜினாமா செய்தால் அவரை சமாதானப்படுத்த அவரது குடும்பத்தினருக்கு சில பதவிகள் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அதனை காரணம் காட்டியே பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என கூறப்படுகிறது. இதனை ஈடு கட்டும் விதமாக துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி எம்.பி.,யுமான கதிர் ஆனந்துக்கு வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது மருமகள் சங்கீதாவுக்கு துரைமுருகனின் காட்பாடி தொகுதியில் எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

33

முன்னாள் அமைச்சர் பொன்முடியையும், வெள்ளக்கோயில் சாமிநாதனையும் துணைப் பொதுச் செயலாளராக அறிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளியாகாமல் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரில் வெளியானது. இப்போதுள்ள பொதுச் செயலாளர் துரைமுருகன் விலகலுக்குப் பிறகு வன்னியரான ஜெகத்ரட்சகனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இப்போது திமுகவில் ஏழு பேர் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்கள். இனி 9 பேர் வரை அந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கலாம் என்று கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories