தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு? முதல்வர் கடுமையாக எதிர்ப்பது ஏன்? தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!

Published : Apr 16, 2026, 12:40 PM IST

Thoguthi Maru Seeramaippu in Tamil : மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களிடையே மோதல்கள் எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
19
Delimitation 2026 News Tamil Nadu

மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்தல் அல்லது மறு சீரமைக்கும் நடைமுறையே தொகுதி மறுவரையறை எனப்படுகிறது. ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்காளரின் வாக்குக்கும் சமமான மதிப்பு இருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். 

மக்கள் தொகை பெருக்கம் என்பது அனைத்து பகுதிகளிலும் சீராக இருப்பதில்லை. மக்கள் தொகை அதிகம் உள்ள தொகுதிகள் மற்றும் குறைவான தொகுதிகளுக்கு இடையேயான வேறுபாட்டை சரி செய்து அனைத்து தொகுதிகளிலும் ஏறக்குறைய சமமான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது.

29
தொகுதி மறுவரையறையை தென்னிந்தியா எதிர்ப்பது ஏன்?

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கு பெரிய அளவில் அரசியல் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குடும்ப கட்டுப்பாடு போன்ற மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி, மக்கள் தொகையை குறைத்துள்ளன. 

ஆனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்களில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை மறுவரையறை செய்யும் பட்சத்தில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் அரசியல் அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

39
தென்னிந்தியாவிற்கு குறையும் பிரதிநிதித்துவம்

தற்போது பரிந்துரைக்கப்படும் மாற்றங்களின் படி ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவ சதவீதமானது முன்பை விட குறையும் அபாயம் உள்ளது. மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களில் அதிக தொகுதிகள் உருவாக்கப்படும். இதனால் இந்தியாவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் நாடாளுமன்றத்தில் வட மாநிலங்களின் பலம் அதிகரித்து, தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. 

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவா என்று தென்னிந்திய முதல்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

49
கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்படும் பாதிப்பு

மத்திய அரசின் இந்த தொகுதி மறுவரையறையை தென்னிந்திய முதலமைச்சர்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கிறார்கள். மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மறுவரையறை செய்வது நாட்டின் பன்முகத்தன்மையையும், மாநிலங்களின் தன்னாட்சி உரிமையையும் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் மாநிலங்களாக தென்னிந்திய மாநிலங்கள் விளங்கி வருகின்றன. 

மக்கள் தொகையை மட்டும் அளவுகோலாக வைப்பதை தவிர்த்து மாநிலத்தின் வளர்ச்சி பொருளாதார பங்களிப்பையும், கணக்கில் கொள்ளும் ஹைபிரிட் முறையை கையாள வேண்டும் என்று தென்னிந்திய முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை வட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அமையும் வருகையில் திட்டமிட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

59
தமிழகத்திற்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?

சமீபத்தில் வெளியான தரவுகளின் படி, 2011 கணக்கீட்டை வைத்துப் பார்த்தாம் தென்னிந்திய மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறையால் பெரும் இழப்புகள் ஏற்படும். தமிழ்நாட்டின் இடங்கள் 39 லிருந்து 50 ஆக உயர்ந்தாலும், விகிதாச்சார அடிப்படையில் 11 இடங்கள் இழப்பு ஏற்படும். கேரளாவிற்கு 8 இடங்களும், ஆந்திராவிற்கு 5 இடங்களும் இழப்பு ஏற்படும். அதே சமயம் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரும் லாபம் அடையும். உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கூடுதலாக 13 இடங்களும், ராஜஸ்தானுக்கு 8 இடங்களும், பீகாருக்கு 9 இடங்களும் கூடுதலாகக் கிடைக்கும்.

69
மத்திய அரசை எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது குறித்து சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், “விந்திய மலைக்கு தெற்கே உள்ள ஒவ்வொரு தென்னிந்தியரும் இந்த மசோதாவால் கோபத்தில் உள்ளனர். தமிழ்நாட்டின் அதிகாரம் குறைக்கப்பட்டால் தமிழ்நாடு சும்மா இருக்காது. ஒவ்வொரு குடும்பமும் வீதிக்கு வரும். 1950-60 களில் திமுகவின் உணர்வுகளுக்கு இந்தியா மீண்டும் சாட்சியாகும். போராட்ட வரலாறை கொண்ட திமுகவின் தலைவராக பேசுகிறேன். நீங்கள் டெல்லியில் அமைதியாக தொகுதி மறுவரையறை செய்து விடலாம் என்று நினைக்காதீர்கள். இதை மிரட்டலாக கருதாதீர்கள். இது ஒரு எச்சரிக்கை” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் ஏப்ரல் 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.

79
கேரள & தெலங்கானா முதல்வர்கள் கடும் எதிர்ப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தவிர அனைத்து தென்னிந்திய முதலமைச்சர்களும் இந்த மசோதாவிற்கு எதிர்த்து தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளதாவது, “1976 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கொள்கையைப பின்பற்றி வளர்ச்சியை எட்டி, மக்கள் தொகையை குறைத்த மாநிலங்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படுவதாகவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறிய வட இந்திய மாநிலங்களுக்கு பரிசு வழங்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். அனைவரையும் கருத்தையும் கேட்டு இந்த மசோதாவை முன் நகர்த்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளதாவது, “புதிய இடங்களை மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் ஒதுக்காமல் 50 சதவீதம் மக்கள் தொகை அடிப்படையிலும், 50 சதவீதம் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜிடிபி அடிப்படையில் ஒதுக்கலாம்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் தண்டிக்கப்பட மாட்டாது என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

89
தென்னிந்திய தலைவர்களை கடுமையாக சாடிய பியூஸ் கோயல்

தொகுதி மறுவரையறையை பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். தொகுதி மறுவரையறை செய்வதால் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறுவது முட்டாள்த்தனமானது. மசோதாவின் முக்கிய சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக எதிர்க்கும் தென்னிந்திய தலைவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களின் புரிதல் என்பது மோசமாக உள்ளது. அவர்கள் அரசாங்கத்திலேயே இருக்க தகுதியற்றவர்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது திமுக உள்ளிட்ட கட்சிகளை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

99
தென்னிந்தியாவுக்கு கிடைக்கும் தண்டனை

தென்னிந்தியா வழங்கும் வரிப்பணமும், உழைப்பும் நாட்டின் வளர்ச்சிக்கு வட இந்திய மாநிலங்களை காட்டிலும் அதிக பங்கை அளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தென்னிந்திய மாநிலங்கள் முதுகெலும்பாக விளங்குகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவது என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வடக்கு Vs தெற்கு என்கிற மோதல் போக்கை உருவாக்கி உள்ளது. அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories