Rahul Silence Sparks Stalin Anger: காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைந்த பின்னரும் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் தொடர்ந்து சலசலப்பு நீடித்து வருகிறது. இதுகுறித்து முழுமையான விவரங்களை பார்ப்போம்.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடந்த முடிந்த நிலையில், ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருவதால், பிரச்சாரமும் தீவிரம் அடைந்துள்ளது. பிரசாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வேகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மட்டும் அதிருப்தியை தருவது போல் அமைந்துள்ளது.
26
பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை:
அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இதுவரை தமிழகத்தில் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இவருடைய நிலைத்தன்மை, கூட்டணி கட்சி இடையே சமரசம் இல்லாத நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
36
சுட்டிக்காட்டப்படும் விஷயங்கள்:
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. அதிலும், ராகுல் காந்தி தொடர்ந்து அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுவது. தமிழக தேர்தல் பிரச்சாரத்தை அவர் புறக்கணிக்க முடிவு செய்திருக்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு சான்றாக இதற்கு முன்பு நடந்த சில விஷயங்களும் அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
46
புதுவை பிரச்சாரம்:
சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்ள வருகை தந்த போது, பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் சலிப்புடன் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அதே நேரம் கேரளாவில் மிகவும் உற்சாகமாக இருந்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி முடிவில் ஏற்பட்ட பிரச்சனைகளே இதற்கு காரணம் என கூறப்பட்டது. அதேபோல் ராகுல் புதுவைக்கு வந்த அதே நாள், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
56
தமிழகத்தை கண்டுகொள்ளாத ராகுல்
இரு கட்சியின் தலைவர்களும் ஒரே நாளில் புதுவை பிரச்சாரத்தில் கலந்து கொண்டாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. அதேபோல், கேரள தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோதும், சென்னை மற்றும் கோவைக்கு வந்திருந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகத்தில் எந்தவித பிரச்சாரமும் மேற்கொள்ளாததும் இப்போது பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.
66
எதிர்கட்சிக்கு அவல்பொரி
இது போன்ற சலசலப்பு காரணமாக, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸின் பங்கு என்ன என்ற விவாதமும் எழுந்துள்ளது. தி.மு.க. தனது சொந்த வலிமையை நம்பி தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தத்தில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பல கேள்விகளை உருவாக்கியுள்ளன. கூட்டணிக்குள் ஒருமித்த செயல் இருக்கிறதா, அல்லது உள்ளக பிரச்சனைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூட்டணி தலைவர்கள் இடையே நடக்கும் மௌனப் போர்... எதிர்க்கட்சியினருக்கு அவல் பொறியாக மாறி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.