திமுக- அதிமுக கூட்டணியில் வெளியான தொகுதி பங்கீடு..! எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்..! டீடெய்ல் ரிப்போர்ட் இதோ..!

Published : Jan 24, 2026, 04:11 PM IST

இந்த தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அதேபோல நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் தனித்து நின்று களம் காண்கிறது.

PREV
14
அதிமுக கூட்டணில் 10 கட்சிகள்

அதிமுகவில் கூட்டணி விவகாரம் மிகப்பெரிய புயல் கிளப்பி வந்தது. பாஜக தவிர யாரும் கூட்டணியில் சேராத நிலையில் நிச்சயம் வெற்றி கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி அதிமுகவில் கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகள் குறித்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் அதிமுகவில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி. தினகரன் தலைமையிலான அமமுக, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சி. பூவை ஜெகன் மூர்த்தியின் புதிய பாரதம் கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம் செக்யூலர் ஆகிய 10 கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கின்றன.

24
என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

இது தவிர தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் பிரேமலதா விஜயகாந்த் இது பற்றி முடிவு தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அதிமுக சார்பில் கூட்டணி தொகுதி பங்கீடுகளும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக 170 லிருந்து 180 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாஜகவுக்கு 20 தொகுதிகளும், அமமுகவுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

இந்திய ஜனநாயக கட்சி மற்றும் புதிய நீதி கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகளும், ஜான்பாண்டியனின் தமிழகம் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

34
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

இதே போல் திமுக தரப்பிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை திமுகவுடன் தான் கூட்டணி என்கிற முடிவு ஏற்பட்டுள்ளது. திமுக 175 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் ஒடுக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதியும், அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் ஆதித்தமிழர் பேரவைக்கு தலா 1 தொகுதிஊ ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மைய கட்சிக்கு 3தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

44
தனித்து களம் காணும் தவெக- நாதக

மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும் திமுகவில் இணைய காத்திருக்கிறது. அந்த வகையில் பாமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை தேமுதிக, திமுக கூட்டணிக்குள் வந்தால் அந்த கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தவிர மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்து இருந்த தவெகக்கு சரியான கூட்டணி அமையவில்லை. இதனால் இந்த தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அதேபோல நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் தனித்து நின்று களம் காண்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories