அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிட நான்.. என்னை ஒன்றும் செய்யாது..! மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published : Jan 24, 2026, 11:41 AM IST

யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கிற நிலையில் நாங்களும் இல்லை. தேச பக்தி பாடம் எடுக்கிற அளவிற்கு இந்த தேசத்திற்கான அவர்கள் போராடியதும் இல்லை.

PREV
13

‘‘நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வெல்வோம். எங்களின் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு 2.0 ஆட்சி இருக்கும்தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘நாங்கள்தான் மீண்டும் வருவோம். நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வெல்வோம். எனக்கும், எனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி வந்திருக்கிறேன். திராவிட மாடல் அரசுதொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். என்ன சீண்டிப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை ஒன்றும் செய்யாது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொள்கிறேன். அவர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த ஆளுநர்கள் இப்படியில்லை.

23

முரண்பாடுகள் இருந்தாலும் இதயத்தை ரணமாக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டதில்லை. ஆளுநருக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன் யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கிற நிலையில் நாங்களும் இல்லை. தேச பக்தி பாடம் எடுக்கிற அளவிற்கு இந்த தேசத்திற்கான அவர்கள் போராடியதும் இல்லை. இடியாப்ப சிக்கலான சூழலில் ஆட்சிக்கு வந்தோம். அதனால் கவலை கொண்டவனாக நான் இருந்தேன். ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் இப்போது சொல்கிறேன். நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

33

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நான், அவரது உரைக்கு விளக்கமளிக்கும் நிலையில் உள்ளேன். ஆட்சி பொறுப்பேற்று 1,724 நாட்களாகின்றன. இதில் 8,658 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை சென்றுள்ளேன். 21 மாவட்டங்களில் மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் கவலையும் இருந்தது.

பின்னடைவிலிருந்த தமிழகம், ஒத்துழைக்காத ஓரவஞ்சனை, ஒன்றிய பாஜக அரசு ஆகியவற்றால் கவலையில் இருந்தேன். 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் இப்போது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories