விஜயிடம் இருந்து இறுதியான முடிவு வரும் வரை காத்திருக்கிறது பாஜக. அதனால்தான் பிரேமலதாவிடம் தேர்தல் சீட் பற்றி உறுதியான முடிவு கூறவில்லை. விஜய் தரப்போ இதுகுறித்து சீரியஸாக டிஸ்கஷன் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
பியூஸ் கோயலிடம் ‘‘பிரேமலதாவிடம் பேசி சீட் நம்பர் எதுவும் கம்ட் செய்து கொள்ள வேண்டாம்’’ எனச் சொல்லி இருக்கிறார் அமித் ஷா. விஜய் தரப்பிடம் அமித் ஷா தரப்பினர் தொடர்ச்சியாக பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் விஜய் தரப்பில் முடிவு சொல்கிற வரை தேமுதிகவை வெயிட் பண்ண வைக்கிற முடிவிலல் பாஜக தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தரப்பிடம் ‘‘நீங்கள் கூட்டணிக்குள் உள்ளே வாங்க. இப்ப வரைக்கும் எங்க கூட்டணியில் சிஎம் வேட்பாளர் யார் என்று நாங்கள் யாரையும் அறிவிக்கவில்லை. நீங்களும் கூட்டணிக்கு உள்ளே வந்து எல்லோரும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம். மற்ற விஷயங்களை பேசி முடிவெடுப்போம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘‘நீங்கள் கேட்கிற சீட் தருகிறோம். தேர்தல் செலவு, மத்த விஷயங்களையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்க சொல்கிறவர்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்துகூட ராஜ்யசபா எம்.பி., பதவியும் தருகிறோம்’’ என பாஜக தரப்பில் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுக்கு விஜயிடம் இருந்து இறுதியான முடிவு வரும் வரை காத்திருக்கிறது பாஜக. அதனால்தான் பிரேமலதாவிடம் தேர்தல் சீட் பற்றி உறுதியான முடிவு கூறவில்லை. விஜய் தரப்போ இதுகுறித்து சீரியஸாக டிஸ்கஷன் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த முடிவும் நாம இப்போதைக்கு எடுக்க வேண்டாம். ஏனென்றால் நம்முடன் ராகுல் காந்தியும் பேசிக் கொண்டு இருக்கிறார். ராகுல் காந்தி இறுதிமுடிவு சொல்வதை வைத்து தான் நாம பாஜக- அதிமுக கூட்டணிக்கு போவதா? தனித்தே போட்டியிடுவதா? என்பதை முடிவு செய்வோம். அதுவரை கூட்டணியைப் பற்றி யாரும், எங்கேயும் பேசாதீங்க’’ என விஜய் கட்சிக்காரர்களுக்கு கட்டளை போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
24
ராகுலை சந்தித்த சபரீசன்
விஜய்க்கு டெல்லியில் இருந்து இப்போதைக்கு குட் நியூஸ் வந்திருக்கிறது. விஜய்க்கு ரொம்பவே பிடித்த அவர் கேட்ட விசில் சின்னத்தை எலெக்ஷன் கமிஷன் ஒதுக்கி கொடுத்திருக்கிறது. விஜய்க்கு என்ன வேண்டுமானாலும் டெல்லி செய்து தருகிறோம் எனச் சொல்கிற சிக்னல் தான் இது அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் நம்மை விட்டு போகாது. இப்படி பேசுவது எல்லாமே சீட்டு அதிகமாக கேட்கத்தான். பேச்சுவார்த்தையில் எல்லாம் சரியாகிவிடும் என திமுக தரப்பு நம்புகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு போன சபரீசன், ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து பேசி இருக்கிறார்.
34
விஜய் மீது ராகுலுக்கு அனுதாபம்
அதிகபட்சமாக 30 சீட் வரைக்கும் தரக்கூட நாங்க ரெடி தான். ஆனால் அமைச்சர் பதவி தர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டுமானால் கூடுதலாக கொடுக்கிறோம். அரசு நியமன பதிவிகளை தருகிறோம். உள்ளாட்சி தேர்தலிலும் அதிகமான இடங்களை ஒதுக்கி தருகிறோம்’’ எனச் சொல்லி இருக்கிறார். இனிமேல் காங்கிரஸ்தான் முடிவெடுக்க வேண்டும் என திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் முடிவெடுக்க தாமதம் ஆகிறது. காங்கிரஸ்காரர்களிடத்தில் விசாரித்தால்,‘ ‘ராகுல், விஜயிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். எங்களுக்கு 100 சீட்டு தரவும், துணை முதல்வர் பதவியை கொடுக்கிறோம் என விஜய் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி நீடித்தால் வெற்றி தான் உறுதியாகும். ஆனால் எங்களுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்காது.
அதே நேரத்தில் விஜய் கொடுத்த ஆஃபரை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு போனால் 100 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடலாம். கட்சிக்கு கூடுதல் எம்எல்ஏக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று ராகுல் கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மீது ராகுல் காந்திக்கு ஒரு பரிதாபம் ஏற்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் திமுக அரசும், ஜனநாயக பட விவகாரத்தில் மத்திய அரசும் அவரை பழிவாங்குகிறார்கள் என்கிற அனுதாபமும் ராகுலுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் விஜயின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக சர்வே ரிப்போர்ட் போயிருக்கிறது. இதுவும் காங்கிரசுக்கு நல்லது தான் என ராகுல் நினைக்கிறார். இதனால் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று கூறுகிறார்கள். ராகுல் காந்தி பல கணக்கு போட்டு வைட்திருப்பதால் காங்கிரஸ் திமுகவை மண்டை காய வைத்துக் கொண்டு இருக்கிறது என்கின்றார்கள் விஷயம் அறிந்தவர்கள்.