கனிமொழி இடத்தை லாபி செய்யும் மருமகன்..! சபரீசனுக்கு முக்கிய பதவி..! ஸ்டாலின் அதிரடி..!

Published : Jan 23, 2026, 09:58 AM IST

இதுவரை மாப்பிள்ளை சபரீசன் வெளியில் தெரியாமல் இயங்கிவந்தார். கடந்த இந்தத் தேர்தலில் எல்லாவற்றுக்கும் சூத்ரதாரி சபரீசன்தான் என திமுக குடும்பம் நம்புகிறது.

PREV
13
திமுகவில் காலியான ராஜ்யசபா எம்.பி பதவி

மருமகன் சபரீசன் திமுகவில் பின்னணியில் இயங்கும் முக்கியமான அரசியல் வியூக வகுப்பாளராகவும் பென் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். திரைமறைவில் அரசை இயக்கும் முக்கியமான நபராக இருந்தபோதும் அவர் எந்த நேரடி அரசியல் பதவியும் ஏற்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக 2019, 2021 முதல் தற்போது வரை திமுகவில் காலியான ராஜ்யசபா இடங்களுக்கு அவருக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி,க்களில் அதிமுக - தம்பிதுரை, தமாகா, ஜி.கே.வாசன், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, டாக்டர் கனிமொழி ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 1ம் தேதியோடு முடிவடைகிறது.

23
சூத்ரதாரி சபரீசன்

திமுகவுக்கு கிடைக்கவுள்ள நான்கு எம்.பி., சீட்டுகளில் இரண்டை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒன்றை காங்கிரசுக்கும், மற்றொரு எம்.பி., சீட்டை விடுதலை சிறுத்தைகள் அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாப்பிள்ளை சபரீசன் வெளியில் தெரியாமல் இயங்கிவந்தார். கடந்த இந்தத் தேர்தலில் எல்லாவற்றுக்கும் சூத்ரதாரி சபரீசன்தான் என திமுக குடும்பம் நம்புகிறது. இனி பகிரங்க அரசியலில் மாப்பிள்ளை இறங்கினாலும் ஆச்சர்யப்படுதற்கில்லை. அந்த வகையில், முதல்வராக ஆகியிருக்கும் ஸ்டாலினுக்கு டெல்லி அரசுடன் சரியானரீதியில் லாபி செய்வதற்கு ஆட்கள் இல்லை என்பதால் ராஜ்யசபா பதவியை மாப்பிள்ளைக்குக் கொடுத்து டெல்லிக்கு அனுப்ப வாய்ப்புண்டு.

33
கனிமொமி இடத்துக்கு சபரீசன்

மீதமுள்ள இரண்டு எம்.பி., சீட்டுகளில், ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு வழங்கவும், மற்றொன்றை தற்போதைய டில்லி பிரதிநிதி ஏ.கே.விஜயனுக்கு வழங்கவும் திமுக மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல். கட்சியின் துணை பொதுச்செயலரும், மக்களவை எம்.பி.,யுமான கனிமொழி மாநில அரசியலுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லி அரசியலில் சபரீசனை ஈடுபடுத்த வேண்டும் என, முதல்வரிடம் மாவட்டச் செயலர்கள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.

அதையடுத்து, திமுகவுக்கு கிடைக்கவுள்ள நான்கு ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளில் ஒன்றில் சபரீசனை நிறுத்தி வெற்றி பெற வைத்து, அவரை டெல்லிக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்

Read more Photos on
click me!

Recommended Stories