தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவும், அதிமுகவும் ஏப்ரல் 2025-ல் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ நடத்தும் என அறிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை உறுதிப்படுத்தினார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்தால் சில சவால்களும் எதிர்க்கொண்டு வருகின்றன.
டிசம்பர் 23-ஆம் தேதி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. கடந்த முறையைவிட பாஜக அதிக தொகுதிகளை டிமாண்ட் வைத்துள்ளது. பாமக, தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோரை மீண்டும் என்டிஏ-வில் சேர்க்கும் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் அதிமுக வியூக வகுப்பாளர்கள் முந்திரிக்கொட்டை தனமாக வெளியிட்ட சீட் லிஸ்ட் வெளியானது. இதனால், வெறுப்பான ஓ.பி.எஸ், டிடிவி.தினகரன், பிரேமலதா ஆகியோர் அதிமுக மீது அதிருப்தியாகி மாற்று கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.