ராஜகண்ணப்பன் இடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு.. முக்கிய பொறுப்பு ..!

First Published | Jul 22, 2023, 8:36 AM IST

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இருந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அம்மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tap to resize

தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!