தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் விழா இன்று தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான இடங்களில் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகளை கொடுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள அந்த விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் என அகில இந்திய அளவில் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.