பின்னர், மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.