செருப்பு..! இதனால் தான் வீசப்பட்டது.. செந்தில் பாலாஜி உடைத்த கரூர் ரகசியம்!

Published : Oct 01, 2025, 12:47 PM IST

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

PREV
13
செந்தில் பாலாஜி பேட்டி

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "இந்த துயர சம்பவம் ஏற்கனவே எதிர்பார்க்கப்படவில்லை. மேலும் ஒரு நிகழ்வு எங்கும் நிகழக்கூடாது. கூட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், கூட்டத்தில் கலந்திருந்தவர்கள் சிரமப்பட்டனர்

23
கரூர் கூட்ட நெரிசல்

கரூரில் இதுவரை இதுபோன்ற துயர சம்பவம் நடந்ததே இல்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தவெக கட்டமைப்பில் சரியாக இல்லை. வழங்கப்படவேண்டும். லைட் ஹவுஸ் கார்னர் அளவில் வெறும் 7,000 பேர் மட்டுமே நிற்க முடியும். ஆனால் அப்போது நிலைமை மோசமாக இருந்தது. விஜய் பேச ஆரம்பிக்கும் முன்பே கவனத்தை ஈர்க்க சிலர் செருப்பு வீசியிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

33
கரூரில் நடந்தது என்ன?

மேலும் பேசிய அவர், "கரூர் துயர நிகழ்வை எந்தவொரு அரசியல் கோணத்திலும் பார்க்க வேண்டும். தவெக கூட்டத்தில் எங்கேயாவது தண்ணீர் பாட்டில்கள் இருந்ததா? அல்லது பிஸ்கட் பாக்கெட் இருந்ததா? இந்த அடிப்படை வசதிகளின் காரணமாக நிலைமை சிக்கியது" என்று கூறி, சம்பவத்தின் காரணத்தை விளக்கியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories