கரூரில் நடந்தது சதிதான்..! சிபிஐ விசாரிக்காவிட்டால் முதல்வர் வீட்டை தகர்ப்போம்..! கேரளாவில் பகீர் மிரட்டல்..!

Published : Oct 01, 2025, 11:54 AM IST

‘‘திமுக தலைவர்கள், சில காவல்துறை அதிகாரிகள் இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தாவிட்டால் பழிவாங்கும் விதமாக கேரளாவில் உள்ள முதல்வர் அலுவலகம் மற்றும் கிளிஃப் ஹவுஸில் வெடிகுண்டுகள் வைத்து தகர்ப்போம்’’

PREV
13
கேரளாவில் விஜயின் செல்வாக்கு

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த துயரம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேரள முதல்வர் இல்லத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ரசிகர்கள் கேரளாவில் சமூக சேவை, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பட ரிலீஸ் போன்றவற்றில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். விஜய்க்கு கொல்லம் மாவட்டத்தில் மட்டும் ரசிகர் மன்றத்தில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. 5 சதவிகித வாக்காளர்கள் விஜய்க்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். தமிழகத்தை போலவே கேரளாவில் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.

23
பின்னணியில் திமுக..?

இந்நிலையில், கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு நேற்று ஒரு இமெயில் வந்தது. அதில் முதல்வர் அலுவலகம் மற்றும் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட் டிருந்தது. அந்த இமெயிலில், ‘‘திமுக தலைவர்கள் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள் இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தாவிட்டால் பழிவாங்கும் விதமாக கேரளாவில் உள்ள முதல்வர் அலுவலகம் மற்றும் கிளிஃப் ஹவுஸில் வெடிகுண்டுகள் வைத்து தகர்ப்போம்’’ என அந்த இமெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

33
மிரட்டல் விடுத்தது யார்..?

இதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகம் மற்றும் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் இமெயில் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories