மக்கள் யாருடைய பக்கம் இருப்பார்கள் என்பதும் அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த நேரத்தில் விஜய்க்கு எதிராக பேசி இருந்தால் அவர்கள் மீதும் மக்கள் மத்தியில் வெறுப்பு வந்து இருக்கும்’’ தவெக தொண்டர்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு வருகின்றனர்.
விஜய் தலைமையிலான த.வெ.க கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியலை உலுக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக பாஜக- அதிமுக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது திமுகவுக்கு எதிரான ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
24
விஜயை காப்பாற்றும் தந்திரம்..?
போலீஸ் அனுமதி தாமதப்படுத்தியதும், போதிய பாதுகாப்பு கொடுக்காததும்தான் காரணம் என திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளது. இது த.வெ.க-வின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவை வலுப்படுத்தியது.அதிமுக, பாஜக தலைவர்கள் விஜயை கண்டிக்காமல், திமுக அரசு மீது குற்றம் சாட்டினர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்பு விஜயை விமர்சித்து இருந்தாலும், சிபிஐ விசாரணை கோரினர். இது ‘விஜயை காப்பாற்றும் தந்திரம்’ என்று விமர்சனம் எழுந்தது.
அதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 8 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, செப்டம்பர் 30 அன்று கரூரில் விசாரணை நடத்தி வருகிறது. பாஜக தலைவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆதரவு அளித்தனர்.
34
தவெகவை அறிவாலயம் தவிடு பொடியாக்கி இருக்கும்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விஜயின் பிரச்சாரங்களை முந்தைய காலத்தில் விமர்சித்தாலும், இந்த சம்பவத்தில் அவருக்கு வலுவாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுகவும், பாஜகவும் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கவில்லை என்றால் தவெகவை திமுக கடுமையாக தண்டித்து இருக்கு என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். சமூக வலைதளத்தில், ‘‘எடப்படியார் மற்றும் அண்ணாமலை பாதுகாப்பு குறைபாடு பற்றி தெளிவாக பேசவில்லை என்றால் தவெகவை தவிடுபொடியாய் இடித்து தள்ளி இருக்கும் அறிவாலயம்’’ எனக் கூறி வருகின்றனர்.
‘‘அதிமுகவும் பாஜகவும் மட்டும் இப்போ இல்லனா தவெகவை நாலா மடிச்சி வாய்ல போட்டு இருக்கும் திமுக’’ எனவும், அண்ணாமலையோட நடுநிலைமையான அந்த பேட்டி மட்டும் வரவில்லைஎன்றால், தவெகவை நாலா மடிச்சி வாய்ல போட்டு இருக்கும் திமுக. அவர்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதேபோல் மக்கள் யாருடைய பக்கம் இருப்பார்கள் என்பதும் அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த நேரத்தில் விஜய்க்கு எதிராக பேசி இருந்தால் அவர்கள் மீதும் மக்கள் மத்தியில் வெறுப்பு வந்து இருக்கும்’’ தவெக தொண்டர்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு வருகின்றனர்.