சமீபத்தில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் விழாவில் பத்திரிக்கையாளர்களை சசிகலா சந்தித்தபோது ‘‘தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘தேர்தல் களத்தில் இறங்குவேன்’’ என சசிகலா பதில் தெரிவித்தார். இதன் பின்னணியில் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும், தவெகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.
புதிய கட்சி தொடங்குவது குறித்து சசிகலா தனுக்கு ஆதரவாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். பிப்ரவரி 24ஆம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது. அன்று ராமநாதபுரத்தில் அல்லது மதுரையில் மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உறுதியாக அந்த மாநாடு மதுரையில் நடப்பது உறுதி என்கிறார்கள். அன்றைய தினம் கட்சியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அவரது சகோதரர் திவாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. சசிகலாவின் கணவர் நடராஜனின் நண்பர்கள் சிலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.