‘‘பிள்ளையார் சிலையை போட்டு உடைத்த பெரியாரால் எப்படி நிம்மதியாக இருக்க முடிந்தது? கடவுள் இல்லை என்று கூறிவிட்டு எவ்வாறு அவர் 94, 95 வயது வரை வாழ்ந்தார்? என என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ‘‘கடவுள் பயம் இருப்பது சராசரி மனிதனின் இயல்பு. ஏனென்றால் எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ள முடியாமல் யாரிடமாவது முறையிட முடியும் என யாரோ ஒரு சக்தி படைத்தவரிடம் சொல்ல வேண்டும் என்கிற ஒரு வழிமுறையை நம்முடைய முன்னோர் உருவாக்கி தந்திருக்கிறார்கள். பெரியாரிடம் அது இல்லை. ஏன்? எப்படி அவரால் கடவுளை இல்லை என்று சொல்ல முடிந்தது?
23
பெரியார் சராசரி மனிதராக இல்லை
கடவுளை வழிபடாமல் எப்படி 94, 95 வயது வரையில் வாழ முடிந்தது? பிள்ளையார் சிலையை போட்டு உடைத்து எப்படி அவரால் மன அமைதியோடு வாழ முடிந்தது? மகிழ்ச்சியோடு வாழ முடிந்தது? ஏனென்றால் அவர் நம்மைப் போன்ற சராசரி மனிதராக இல்லை. சில வளையங்களை போட்டுக் கொண்டு அதற்குள்ளே தன்னை அவர் முடக்கிக் கொள்ளவில்லை’’ எனத் தெரிவித்தார்.
33
நிம்மதியாக வாழ்ந்தாரா?
திருமாவளவனின் பேச்சால் வெறுப்பான சிலர், ‘‘இதுதான் சனாதான தர்மம். இந்துக்களுக்குறிய சகிப்புத்தன்மையை தவறாக பயன்படுத்தப் பார்க்கிறீர்கள். பிற மதங்களின் மீது இந்தளவு விமர்சனம் வைத்திருந்தால் 50 வயதைக்கூட கடந்து இருக்க மாட்டார். என்றைக்கோ படுகொலை ஆகியிருப்பார். எவ்வளவு வருஷம் வாழ்ந்தார் என்பது முக்கியம் இல்லை. எப்படி வாழ்ந்தார்கள் என்பது தான் முக்கியம். அவர் நிம்மதியாக வாழ்ந்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்’’ என பதிலடி கொடுத்து வருகின்றனர்.