கூட்டணி இறுதி செய்யப்படும் நிலையில், அந்த அறிவிப்பும் வெகு விரைவில் வரவிருக்கிறது. கடந்த தேர்தலைகளை பார்த்தாலும் திமுகவில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்ட பின்னரே, தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த முறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படும் என அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கூட்டணிக்கான முடிவுகள், தொகுதி பங்கீடு என அனைத்தையும் முடித்துவிட திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது. அதனால், அதற்கான பணிகள் திமுக தலைமையால் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் படலமும் தொடங்கியிருக்கிறது.
பிப்ரவரி இறுதியில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு முடிவுகள் என அனைத்தும் எடுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்ததினமான மார்ச் 1ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை திமுக வெளியிட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.