சிறுவயதில் இருந்து ராமதாசுடன் தான் சுசீலா இருக்கிறார். பழுத்த அரசியல்வாதி உடனான பயணம் அவருக்கு அரசியலையும் கற்றுத் தந்தது. சில விவகாரங்களில் ராமதாசுக்கு ஆலோசனையும் சொல்லி வந்தவர் தான் சுசீலா. இந்த நிலையில் கட்சியில் அன்புமணியின் ஆதிக்கம் அதிகமாவதால் தன்னால் தைலாபுரத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதுதான் சுசீலாவின் எண்ணம். காடுவெட்டி குரு போல தன்னையும் ஆக்கி விடுவார்களோ? என்ற எண்ணத்தில் தான் கட்சியின் கட்டுப்பாட்டை முழுக்க முழுக்க தன் பக்கம் கொண்டுவர ராமதாஸைப் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள்.
ராமதாஸ் ஆதரவு எனச் சொல்லிக் கொண்டாலும் அவர்களை இயக்கியது என்னவோ சுசிலாதான். காரணம் தன் வசம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சொத்து தன்னை விட்டுப்போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை. சென்னை, மாதவரத்தில் பிரபல பள்ளி ஒன்று இருக்கிறது. அதன் மதிப்பு இன்று ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். பராமரிப்புத் தொகையாக சுசிலா குறிப்பிட்ட தொகையைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் நிரந்தரமாக அந்தப் பள்ளியைத் தன் பெயருக்கு மாற்றவும், 25 லட்சம் ரூபாய் பராமரிப்புத் தொகையாக வேண்டும் என்பதே சுசிலாவின் கோரிக்கை. சுசீலாவுக்கு விஸ்வகர்மா என்ற பெயரில் ராமதாஸ் அறக்கட்டளை ஒன்றையும் வைத்துக் கொடுத்து இருக்கிறார். அந்த அறக்கட்டளையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.