எடப்பாடிக்கு செங்கோட்டையன் வைக்கும் அணுகுண்டு..! சசிகலாவிடம் கட்சியை ஒப்படைக்கத் திட்டம்..!சிதறும் அதிமுக..!

Published : Sep 03, 2025, 11:13 AM IST

திமுகவிலோ அவர் இணைய மாட்டார் எனவும் ஓ.பி.எஸ், டி.டி.விினகரனுடன் இணைந்து செயல்படுவார் எனவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

PREV
14

‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என சசிகலா அறிக்கைவிட்ட அடுத்த நாளிலிருந்து ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் அடுத்தடுத்து பேசி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கும் சீனியர்கள் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் டி.டி.தினகரன் உள்ளிட்ட சீனியர்கள் ஒன்றிணைந்து சசிகலா தலைமையில் அணிசேர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் உட்கட்சி அரசியல் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது. மிக நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் வரும் அவர் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

24

இது ஒருபுறம் இருக்க, பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து அதிமுகவில் ஒரு தரப்பு மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பாஜக கூட்டணி வேண்டும் என வலியுறுத்திய நிலையில் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதற்காக பணிகளை நான் தொடர்ந்து செய்வேன் என அறிக்கைவிட்டார் சசிகலா.

34

அதிமுகவினர் இதற்கு பெரிய அளவில் கண்டுகொள்ளாத நிலையில், தற்பொழுது அந்த கட்சியில் லேசாக புயல் வீசத் தொடங்கி இருக்கிறது. ‘‘அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதை நோக்கியே எனது பயணம் இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவில் இணைவதற்கு எனக்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை’’ எனக் கூறினார் ஓ பன்னீர்செல்வம். அடுத்த நாளே பேசிய டி.டி.வி. தினகரன், ‘‘ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு எனது ஆதரவு எப்போதுமே இருக்கும்’’ என தெரிவித்தார்.

44

இந்நிலையில் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் செங்கோட்டையில் செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் என கூறி இருப்பது அதிமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து விலகலாம் என்றும் கூறப்படுகிறது. திமுகவிலோ அவர் இணைய மாட்டார் எனவும் ஓ.பி.எஸ், டி.டி.விினகரனுடன் இணைந்து செயல்படுவார் எனவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரோடு செங்கோட்டையனும் கைகோர்க்கலாம் எனவும், இந்த அணி விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories