விஜயகாந்தின் அதே பாணி..! விஸ்வரூபம் எடுக்கும் விஜய்..! திமுக- அதிமுகவை சிதைக்கும் தவெக கூட்டணி..!

Published : Sep 02, 2025, 07:53 PM IST

மக்கள் நலக் கூட்டணிபோல தோல்வியை தழுவுமா? இல்லை, முதன் முறையாக மூன்றாவது கூட்டணியாக வெற்றி பெற்று சாதனை படைக்குமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி. 

PREV
14

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் எதிர்த்து தேமுதிக, மதிமுக, விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சி தலைவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர். அந்த கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அந்த தேர்தலில் களமிறங்கியது. தமிழக அரசியலில் இந்த மும்முனைப்போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தேர்தலில் அந்த கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.

10 ஆண்டுகளுக்கு பிறகு அதே போன்றதொரு, கூட்டணி அமையக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அப்போது விஜயகாந்த். இப்போது விஜய். தனது அரசியல் கட்சியை அறிவித்ததில் இருந்தே, அரசியல் களத்தில் விஜய் மீதான கவனம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை துவங்கிவிட்டாலும், அவரது முழு இலக்காக சட்டமன்றத் தேர்தலே இருந்து வந்தது. நடிகர் விஜய்யால் ஆரம்பிக்கப்பட்ட தவெக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சவாலாக இருக்கும் என பரபரத்துக் கிடக்கிறது தேர்தல் களம்.

24

விஜய் களத்திற்குள் வரும்போதே திமுக, அதிமுகவை தவிர்த்து ஏனைய கட்சிகளை தன் பக்கம் ஈர்க்கும் விதமாக “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற அறிவிப்போடு, தனது அரசியல் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில்தான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விசிகவின் கருத்தை விஜய் வெளிப்படுத்திய நிலையில், தவெக பக்கம் விசிக செல்லும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், விசிக தலைவர் திருமாவளவன் திமுகவை விடுத்து வேறு காட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறினார்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலில், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெகவை ஆதரிக்கும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளது. விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக எதிரொலிக்கிறது. ஏனென்றால், அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக, அமமுக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவான அறிவிப்பு எதையும் அவர்கள் இதுவரை வெளியாகவில்லை.

34

சட்டமன்றத்திற்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், சமீபத்தில் தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளை வைத்து இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் திமுக கூட்டணி மீண்டும் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், அதேசமயம் திமுக எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும், அது அதிமுக – பாஜக வாக்குகளை பிரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த சூழலை மாற்றும் நோக்கில் விஜய் தலைமையில் அதிமுக – திமுகவிற்கு எதிரான கட்சிகள் களமிறங்க வாய்ப்புகள் கூடிவருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், விஜயுடன் கூட்டணியா.? என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஓபிஎஸ் இன்று தெரிவித்திருந்தார்.

தற்போது ஒபிஎஸ்ஸின் நிலைப்பாட்டை தொடர்ந்து, அதே போன்றதொரு கருத்தை, டி.டி.வி.தினகரனும் பூடகமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெறுவோம்’’ என்பதைத்தான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். வருகிற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டில் தேர்தலின்போது விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினார். அததேபோல, வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில், எல்லா கட்சிகளுக்கும் தவெக பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் எதார்த்தமான உண்மை. அதற்காக நான் அந்தக் கூட்டணிக்கு செல்வதாக அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்து இருந்தார் டி.டி.வி.தினகரன்.

44

“2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பும் கூட்டணி அமையும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள், எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும். அந்த சமயத்தில், அமமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதும் தெரியவரும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக எங்களின் நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு. எனவே டிசம்பர் மாதம் உறுதியாக தெரியவரும்” எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

டி.டி.வி.தினகரன், அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு அணியின் ஓபிஎஸ் ஆகியோர் இது போன்ற பூடகமான கருத்துகளை தெரிவிப்பது, விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்பதை உறுதி செய்வதாகவே கருதப்படுகிறது. தவெக மூன்றாவது கூட்டணி அமைப்பது அதிமுக, திமுக வாக்குகளை சிதைக்கலாம். ஆனால், மக்கள் நலக் கூட்டணிபோல தோல்வியை தழுவுமா? இல்லை, முதன் முறையாக மூன்றாவது கூட்டணியாக வெற்றி பெற்று சாதனை படைக்குமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

Read more Photos on
click me!

Recommended Stories