நீயா.. நானா..? பார்த்துடலாம் வா..! அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் பகீர் முடிவு..! புகுந்து விளையாடும் திமுக..!

Published : Sep 18, 2025, 10:54 AM IST

வடமாவட்டங்களில் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாமக அன்புமணியும், ராமதாஸ் பிரிப்பது திமுகவுக்கு தான் லாபம் என்று சொல்கிறவர்கள் ராமதாஸ் அணி தனியாக நிற்பது திமுகவின் திட்டம் தான் என்கிறார்கள். 

PREV
14
அன்புமணி- ராமதாஸ் மோதல்

ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல், கட்சியின் அடித்தளத்தை குலைக்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. இது குடும்பப் போராட்டமாகவும், அதிகாரப் பிரச்சினையாகவும் வளர்ந்து, தேர்தல் ஆணையத்தின் தலையீடு வரை சென்றுள்ளது. 2024 டிசம்பரில் தொடங்கிய இந்த மோதல், செப்டம்பர் 2025-ல் உச்சத்தை அடைந்தது.

புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில், ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை (மகள் காந்திமதியின் மகன்) இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தை விட்டு வெளியேறினார். ராமதாஸ் "கட்சியில் இருக்க இஷ்டம் இல்லாதவர்கள் வெளியேறலாம்" எனக் கூறினார்.

ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக பதவியை மாற்றினார். அன்புமணி தனது தலைமையை உறுதிப்படுத்தி, கட்சியை நவீனப்படுத்துவேன் என அறிவித்தார். இரு தரப்பும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கினர். ‘‘அன்புமணி கட்சியை சூறையாடுகிறார்" என ராமதாஸும், ‘‘ராமதாஸ் கட்சியை குடும்ப சொத்தாகக் கருதுகிறார்" என அன்புமணி மாற்றி மாற்றி குற்றம்சாட்டி வருகின்றனர்.

24
அன்புமணிக்கே வெற்றி

ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, அன்புமணிக்கு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி, விளக்கம் கேட்டு கெடு விதித்தது. பதில் இல்லாததால், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்திலிருந்தும் நீக்கினார்.

திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர்.தேர்தல் ஆணையம் அன்புமணியை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து, அவரது கையெழுத்துடன் மட்டுமே வேட்பாளர் பட்டியல்கள் படிவம் ஏ, பி-யை சமர்ப்பிக்கலாம் என அறிவித்தது. சென்னை தியாகராய நகர் அலுவலகத்தை அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகமாக உறுதிப்படுத்தியது. இது அன்புமணிக்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

34
தனித்தே தேர்தலை சந்திக்கும் ராமதாஸ்

இந்நிலையில், ‘‘ராமதாஸ் அணி தனியாக தேர்தலை சந்திக்கிற திட்டத்தில் இருப்பதாகவும், பின்னணியில் திமுக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாமகவின் தலைவர் அன்புமணி திமுக கூட்டணிக்கு எதிரணியில் தான் இருப்பார் என்பது உறுதியாகிவிட்டது. இன்னொரு பக்கம் டாக்டர் ராமதாஸ் தான் பாமக என்று சொல்கிற அவரது ஆதரவாளர்கள், அவர் தலைமையில் தேர்தலை கூட்டணி இல்லாமல் சந்திக்க போகிறார் என்று சொல்கிறார்கள்.

44
பின்னணியில் திமுக

வன்னியர் சமூகம் யார் பக்கம் என்பதை நிரூபிக்க தேர்தலை கூட்டணி இல்லாமல் சந்திக்க இருக்கிறார் ராமதாஸ் என்று சொல்கிறார்கள். வன்னியர் சமூகம் யார் பக்கம் என்பதை தனியாக நின்று தேர்தலில் நிரூபிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ராமதாஸ். எப்போதும் ராமதாஸ் காரரில் பாமக கொடி கட்டப்பட்டிருக்கும். இப்போது வன்னியர் சங்க கொடியையும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். சட்டரீதியாக கட்சி அன்புமணி பக்கம் இருந்தாலும் கூட, தொண்டர்கள் தன் பக்கம்தான் என்பதை உறுதி செய்ய தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம் ராமதாஸ்.

அதேசமயம் தன்னுடன் நிர்வாகிகளாக வந்துள்ளவர்களுக்கு சீட்டு கொடுப்பதாக உறுதி செய்துள்ளார். தனித்து நின்றால் தான் எல்லோருக்கும் சீட்டு கொடுக்க முடியும் என்கிற லாஜிகையும் இதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள். வடமாவட்டங்களில் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாமக அன்புமணியும், ராமதாஸ் பிரிப்பது திமுகவுக்கு தான் லாபம் என்று சொல்கிறவர்கள் ராமதாஸ் அணி தனியாக நிற்பது திமுகவின் திட்டம் தான் என்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories