தென்காசி எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து? தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

First Published | Jul 6, 2023, 6:35 AM IST

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் செல்வமோகன் தாஸ் பாண்டியன் என்பவரும் போட்டியிட்டனர். இதில், 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதில், தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் மிக குறைவாக இருப்பதாகவும், தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. சில வாக்குகள் எண்ணப்படாமலே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ஆகையால், வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

Latest Videos


தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியர் 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், வழக்கு செலவில் ரூ.10,000 வழக்கு தொடர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

click me!