இது குறித்து கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க ஆணையிட்டுள்ளார். 22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத்திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய் 1200-ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.