கரூர் துயர சம்பவத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தத்து பிள்ளையாக இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளீர்களே விஜய் அண்ணா! எங்கள் குடும்பம் எல்லாம் நடு ரோட்டில் கிடப்பதா விஜய் அண்ணா.
தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் தனித்தனியாக சந்தித்து வருகிறார். அவர் இதற்கு முன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என விவாதம் எழுந்தது.
விஜய் ஏன் கரூருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல் மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்தார் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகின்றன. கரூரில் உள்ள மண்டப உரிமையாளர்கள், நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பயத்தால் விஜய்யின் சந்திப்புக்கு இடம் வழங்க மறுத்துள்ளதாக தவெகவினர் கூறி வருகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்திற்கு அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து விஜய் சந்தித்து வருகிறார் எனக்கூறப்படுகிறது.
23
எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா
"பாதிக்கப்பட்டோரை அழைத்து வருவது தவறு. விஜய் தனது நெருங்கிய ஆலோசகர்களான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் தவறான வழிகாட்டுதலால் தொடர்ந்து தவறு செய்கிறார் விஜய் எனவும், சிலர், இது சிபை விசாரணையை பாதிக்கும் முயற்சி எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியபோது இருவர் உயிரிழந்தனர், அவர்களுக்கு விஜய் ஆறுதலோ, நிவாரணமோ வழங்கவில்லை. இந்நிலையில் இன்று திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ‘‘அக்போபர் வீர வணக்கம்! 27 வீர வணக்கம்! முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி. தமிழக வெற்றிக் கழகத்தின்
முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம். எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா. 15 ஆண்டு காலமாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம். எங்களை மறந்து விட்டாயே அண்ணா.
33
ஆத்மா வழி நடத்தும் விஜய் அண்ணா
கட்சி மாநாட்டிலும், பொது கூட்டத்திலும்கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே விஜய் அண்ணா! முதல் சுற்று பயணம் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தாயே விஜய் அண்ணா. அப்பொழுது எங்களுடைய உழைப்பில் முதல் வெற்றியை பெற்றீர்களே. அப்பொழுதுகூட எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா! கரூர் துயர சம்பவத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தத்து பிள்ளையாக இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளீர்களே விஜய் அண்ணா! எங்கள் குடும்பம் எல்லாம் நடு ரோட்டில் கிடப்பதா விஜய் அண்ணா. நீங்கள் மறந்தாலும் மேலும் மேலும் நீங்கள் உயர எங்களுடைய ஆத்மா வழி நடத்தும் விஜய் அண்ணா’’ என வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.