கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறிவருகிறார் தவெக தலைவர் விஜய்.
இதுகுறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘‘வரலாறு திரும்புகிறது என்று என் தம்பியே குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல இது ஒரு வரலாறு திரும்புகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். இதில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஆன்றோர்களும், சான்றோர்களும், மிகப்பெரிய அறிஞர் பெருமக்களும் இருந்து இந்த இடத்தில் அரசியல் செய்த நிலம். இது எங்கள் தாத்தா தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர், காமராஜர், கக்கன், ஜீவானந்தம், சிங்காரவேலர், அயோத்திதாசர், எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் என ஏகப்பட்ட பெருமக்கள். அவர்களை பார்த்து, அவர்களைப் போல ஒரு நல்ல அரசியல் நாட்டில் உருவாக வேண்டும். நல்லாட்சி இந்த நாட்டுக்கு மக்களுக்கு மலர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது வேற பக்கம் திசை திருப்பி செல்கிறது.