விஜயுடன் கூட்டணி இல்லை..! இனி யாரும் வாய்திறக்க வேண்டாம்..! ராகுல், கார்க்கே திட்டவட்டம்..!

Published : Nov 21, 2025, 10:59 AM IST

தவெக உடன் கூட்டணி என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவாதங்கள் மேலும் தொடர்ந்தால் அது திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையே மன வருத்தங்களை அதிகரிக்கும்.

PREV
14
காங்கிரஸ் யாருடன் கூட்டணி..?

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருவதாக விவாதங்கள் கிளம்பியது. அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி என்றும், இல்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி தலைமைக்கும் அழுத்தம் கொடுத்து வந்தனர். "திமுக-காங்கிரஸ் கூட்டணி இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்" என அறிவுறுத்தி வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு ராகுல் காந்தி, விஜயை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்த பிறகு தவெக காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுகள் மேலும் விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில், காங்கிரஸ், திமுக கூட்டணியில்தான் தொடர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுனா கார்கேவும் உறுதிபடக் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

24
மல்லிகார்ஜூனா கார்கே எடுத்த முடிவு

தனியார் புத்தக விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தமிழக கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில் விரைவில் டெல்லியில் இருந்து இந்தியா கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வரும் என்று கூறியிருக்கிறார். கடந்த 18ஆம் தேதி எஸ்ஐஆர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று டெல்லி நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் கூட்டணி குறித்தும் பேசப்பட்டுள்ளது. அப்போது மல்லிகார்ஜுனா கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையுடன் இது குறித்து பேசியுள்ளார். அப்போது ‘‘தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்.

திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்து வருகிறோம். தொடர்ந்து 4, 5 தேர்தல்களாக கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறோம். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் திமுக கூட்டணியுடன் தொடர்வது தான் நல்லது. அப்போதுதான் நமக்கு வெற்றியும் கிட்டும்’’ என்று உறுதிப்பட கூறி இருக்கிறார் மல்லிகார்ஜூன கார்கே. திமுக கூட்டணியின் தொடர வேண்டும் என்ற அவரது கருத்துக்கு மக்களவை எதிர்க்கட் தலைவர் ராகுல் காந்தியும் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று செல்வப்பெருந்தகை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயகலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய செல்வப்பெருந்தகை ‘ ‘இன்னும் சற்று நேரத்தில் டெல்லி காங்கிரஸ் தலைமையில் இருந்து கூட்டணி குறித்து அறிவிப்பு வரும்’’ என்று பேசினார்.

34
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இதுகுறித்து திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என விரைவில் டெல்லியில் இருந்து அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த பின்னணியில் விஜய்- ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக பேசியது பேசியதற்கு பின்னால்தான் தவெக- காங்கிரஸ் கூட்டணி என்கிற விவாதம் கிளம்பியது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் , மல்லிகார்ஜூனா கார்கேயும், ராகுல் காந்தியும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்தி இந்த விவாதங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து பிரச்சினைகளை முடித்து வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில்கூட விஜயுடன் கூட்டணி பற்றி பேசியபோது அதைப் பற்றி எல்லாம் யாரும் பேச வேண்டாம். பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும் என கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு கூட்டணி விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என முடிவெடுத்து இருந்தனர். ஆனால் பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என கேட்டு வந்த பேர வலிமை குறையலாம் என்கிற நிலை உருவானது. பீகார் தோல்வியால் தமிழக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான சீட்டுக்களை திமுக முன்பைவிட குறைக்கலாம் என்கிற பேச்சுகளும் கிளம்பின.

44
விரைவில் அறிவிப்பு

இந்த நிலையில் தமிழகத்தின் எம்.பி, ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸார், விஜய் கூட்டணிக்கு இணைவது போன்ற பல கருத்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் தவெக உடன் கூட்டணி என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவாதங்கள் மேலும் தொடர்ந்தால் அது திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையே மன வருத்தங்களை அதிகரிக்கும். நாம் திமுக கூட்டணியில் தான் 2026 சட்டமன்ற தொகுதி தேர்தலில் தொடர வேண்டும் என்கிற அறிவிப்பை உடனடியாக வெளியிட முன் வந்துள்ளது காங்கிரஸ் டெல்லி தலைமை.

Read more Photos on
click me!

Recommended Stories