வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுடன் அமமுக, ஓபிஎஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதேநேரத்தில் அதிமுகவுடன் தற்போது வரை எஸ்டிபிஐ, புதிய பாரதம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், தேமுதிக அதிமுக, பாஜக ஆகிய இருதரப்பிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
24
Nilgiris Lok Sabha constituency
ஆனால் திமுக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதனால், திமுக தலைமை தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி மக்களவை தொகுதி மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
34
L Murugan
இந்த தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதன் காரணமாக எல்.முருகன் நீலகிரிக்கு அடிக்கடி விசிட் அடித்து வருகிறார். குறிப்பாக கடந்த 6 மாதங்களாக நீலகிரியில் அடிக்கடி முகாமிடும் முருகன், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது தீர்வு காண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களையும் மக்களிடம் எடுத்து செல்கின்றார்.
44
A Raja
கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பல்வேறு வழிகளில் ஆ.ராசா மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதால் தமிழக முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைமை களமிறக்க முடிவு செய்துள்ளது.