இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக தான் என அம்பலப்படுத்துவோம்.. இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி தீர்மானம்

First Published | Jan 21, 2024, 11:53 AM IST

ஆளுநரைக் கொண்டு இணை அரசாக நடத்துவதற்கு திட்டமிடும் பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கினை கண்டிப்பதும், ஆளுநர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என திமுக இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முதலமைச்சருக்கு பாராட்டு தீர்மானம்

சேலத்தில் திமுகவின் இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.  இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில்,  தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடும்பத் தலைவியரின் உழைப்பை மதிக்கும் கலைஞரின் மகளிர் உதவி தொகை திட்டம்,  மாணவர்கள் உடல்நலம் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவு திட்டம், நாளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் நான் முதல்வன் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல தமிழக அரசின் திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 
 

நீட்டுக்கு எதிராக போராட்டம் தொடரும்

கடுமையான நிதி நெருக்கடிகளின் மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடும் வகையில் 2 கோடி 19 லட்சத்து 71 ஆயிரம் குடும்பத்தினர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டின் மாற்றி வரும் அமைச்சர் உதயநிதிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உயிர் பழிவாங்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராட்ட தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட்டுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்காததற்கு  கண்டம் தெரிவிக்கப்பட்டது.
 

Tap to resize

ஆளுநர் பதவியை அகற்றிட வேண்டும்

குலக்கல்வி முறையை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தர் என்று தீர்மானமும் மாநாட்டில் வலியுறுத்தி எடுக்கப்பட்டது . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை நியமன பதவி எனும் ஆளுநர் பதவியை கொண்டு செயல்பட விடாமல் தடுக்க முயற்சி நடப்பதாகவும்,

 ஆளுநரைக் கொண்டு இணைய அரசாக நடத்துவதற்கு திட்டமிடும் பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கினை கண்டிப்பதும் ஆளுநர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்துக்களை ஏமாற்றும் பாஜக

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திட வேண்டும் எனவும், மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. .அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாகிய மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம்.

பாஜக அரசு மக்களுக்கு செய்த துரோகங்களை மறைக்க மதவாத அரசியலை முன்னெடுத்து ஆன்மீகவாதிகளை ஏமாற்றும் செயலாகும்.  நாட்டில் உள்ள இந்துக்களின் பெரும்பான்னை மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு ராமர் கோவிலை காட்டி இந்துக்கள் ஓட்டுகளை வாங்கி விடலாம் என அரசியல் செய்யும் பாஜகவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

மேலும் அரசியல் கணக்கோடு கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பாஜகவின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக ஆட்சியை வீழ்த்திடும் உன் களை வீரர்களாக இளைஞர் அணி செயல்படுவார்கள் எனவும் நாடாளுமன்ற  தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவோம் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்

தொடங்கியது திமுக இளைஞர் அணி மாநாடு.. காலை, மதியம் உணவு பட்டியலில் இத்தனை ஐட்டமா.? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

Latest Videos

click me!