தேர்தல் பணியை தொடங்கிய அதிமுக.! தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை குழுவில் யார் ? யார் ? இடம் பெற்றுள்ளார்கள்.?

First Published | Jan 22, 2024, 11:21 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதிமுக சார்பாக தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சார குழு. தேர்தல் விளம்பர குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தேர்தல் பணியை தொடங்கிய அதிமுக

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே திமுக சார்பாக தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை குழு அறிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது அதிமுக சார்பாகவும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகளை பங்கீடு செய்ய குழு, தேர்தல் அறிக்கை குழு உள்ளிட்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

velumani thangamani

தொகுதி பங்கீட்டு குழு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி பங்கிட்டு குழுவில் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ் பி வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்

Tap to resize

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் அமைச்சர்  செம்மலை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்,  முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் இடம் பெற்றுள்ளனர்

தேர்தல் பிரச்சார குழு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன் படி,  நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை,  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,  முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்,  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்

தேர்தல் விளம்பர குழு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் விளம்பர குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.  முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி வி ஆர் ராஜ் சத்யன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை,  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கிய திமுக... தேர்தல் அறிக்கை, கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைப்பு
 

Latest Videos

click me!