வடமாவட்டங்களின் முக்கிய வாக்கு வங்கியான வன்னியர் சமுதாய வாக்குகள் கொஞ்சம் சிதிறினாலும், அது திமுகவிற்கு சாதகமாகி விடும். ஆகையால் தந்தை, மகனான ராமதாஸ்- அன்புமணி விரிசலை அகற்றி பாமகவை ஒன்றிணைக்க வேண்டும். இது தந்தை- மகனுக்குள்ளான விவகாரம் என்பதால் இருவரையும் சமாதானம் செய்து வைப்பது எளிதான காரியம்தான். முதலில் இந்தப் பிரிவினையை சரி செய்து இருவரையும் உடனே ஒன்றிணைக்க வேண்டும். அதிமுக விவகாரத்தை அடுத்து பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளது பாஜக தலைமை. இந்நிலையில், பாஜக சார்பில் தேசிய அளவிலான தொழிலதிபர்கள் மூலமாக ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் பேசி அவர்களை இணைக்க முயற்சி எடுத்ததாகக் கூறப்படுகிறது.