இது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘‘பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூபாய் 3000 கொடுப்பதற்கு வழி இருக்கிறதா? அதனை ஆராயுங்கள் என உயர் மட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அவ்வளவு நிதி எல்லாம் இல்லை. அதிகபட்சமாக ரூ. 1000 வேண்டுமானால் சாத்தியம். அந்த அளவுக்கு தான் நிதி நிலைமை இருக்கிறது எனக் கூறி இருக்கிறார்கள். இதைக் கேட்டுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2000 கொடுக்கலாம். அதற்குண்டான நிதி ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். அதனால் கூடிய விரைவில் பொங்கல் பரிசு தொகை ரூ. 2000 பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, முதல்வர் ஸ்டாலின் அந்த அதிகாரிகளிடன் மகளிர் உரிமை திட்டத்தை உயர்த்தி வழங்குவது பற்றியும் ஆலோசித்து இருக்கிறார். தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 கொடுக்கிறோம். ஜனவரியில் இருந்து விடுபட்ட மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகையை வழங்கப்போகிறோம். கொடுக்கப் போறோம் என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் இந்த மகளிர் உதவித் தொகையை ரூ. 1500 என சற்று உயர்த்தி ஜனவரியில் இருந்து வழங்கலாமா? என்று கேட்டிருக்கிறார்.
அதிகாரிகள் அதற்கு சில ஆலோசனைகளை வழங்க அதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆகையால் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை உயர்வு என அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகள் எந்த நேரத்திலும் அதிரடியாக வெளியாகலாம்’’ என்று கூறப்படுகிறது.