சென்னை, மதுரவாயில் திமுக எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதியின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முன்னிலையில் தவெக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். அப்போது தவெக இளைஞர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை உடைத்து, படிவங்களை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை வரவேற்று தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த வைஷ்ணவி, ‘‘Gen Z Kids புரிந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது! வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்து இருந்தார்.