குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, மகனுக்கு பொறுப்பு வழங்குவதற்காக என்னை துரோகியாகக் கருதுகிறார் என மல்லை சத்யா விமர்சித்தார். "வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றினேன். ஆனால் மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் சூட்டுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
மோதல் உச்சத்தை அடைந்து, "கைவிடப்பட்டவர்களே வாருங்கள்" என்று வைகோவை கண்டித்து மல்லை சத்யா, உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.மறுமலர்ச்சி திமுக மகன் திமுகவாக சுருங்கியது" என்று விமர்சித்தார். துரை வைகோ ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொண்டாலும், மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மல்லை சத்தியா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்தியா, ‘‘செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்கு சொத்து இருக்கிறது.அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால், அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. அதை வைத்து தான் இந்த வீட்டை அவர் கட்டியுள்ளார்.