இன்றைக்கு பாஜக அவர்களை நோண்டியதாதக் கூறுகிறார்கள். இப்போது இந்த நாட்டைக் காப்பதற்கு பிரியங்கா வேண்டும், ராகுல் காந்தி வேண்டும் எனக் கெஞ்சுகிறார்கள் திமுகவினர். ஆனால், மோடியை விரோதி என்கிறீர்கள். காங்கிரஸ்காரர்கள் திமுகவை எல்லாப்பக்கங்களிலும் குத்தினார்கள். அந்த பக்கம் ரைட்டில் குத்தினார்கள் சிதம்பரம். லெப்டில் குத்தினார் சோனியா காந்தி. நடுவில் குத்தினார் மன்மோகன் சிங். கீழே குத்தினார் ராகுல் காந்தி. எல்லாப்பக்கமும் குத்தியது காங்கிரஸ் கட்சி. அங்கே ஒரு குத்து, இங்கே ஒரு குத்து என வாங்கி விட்டு அய்யோ குத்துகிறார்களே என கதறியது திமுக குடும்பம்.
அப்படி வேதனைப்படுத்திய காங்கிரஸ் கட்சி உங்கள் நண்பன். எதுவுமே செய்யாத பாஜக அவர்களுக்கு விரோதியா? நான் எங்கே இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் நியாயத்தை தான் பேசுவேன். வாழ்க்கை முழுவதும் காங்கிரஸ்காரர்கள் திமுகவுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் காங்கிரஸ்காரர்களுடன் கூட்டணி வைத்தால் நியாயம். ஆனால் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்தால் குற்றமா? இப்படிச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?’’ எனக் கூறியுள்ளார் ஷெல்வி.