வங்கி கணக்கில் 0 பேலன்ஸ்... குண்டுமணி தங்கம் கூட இல்லை- திருமாவளவனின் சொத்து பட்டியலில் வெளியான ஷாக் தகவல்

First Published | Mar 29, 2024, 6:56 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் வெளியாகி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் ஒரு வங்கி கணக்கில் இருப்பு தொகையே இல்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 4 கார்கள் மற்றும் டெம்போ டிராவலர் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

thirumavalavan

வேட்பாளர்களின் சொத்து பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினத்தோடு முடிவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வேட்பாளர்கள் தங்களது சொத்து பட்டியல் மற்றும் குற்ற வழக்கு தொடர்பான பின்னனியை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியில் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது. ஒரு சில வேட்பாளர்களின் சொத்து பட்டியில் பொதுமக்களை தலை சுற்றவைக்கும். அந்த வகையில், 

Aatral Ashokkumar

மிரள வைக்கும் சொத்து

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளரின் சொத்து தான் தற்போது வரை அதிகளவில் உள்ளது.ஆற்றல் அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 43 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளது. 

Tap to resize

ஏசி சண்முகம் சொத்து மதிப்பு

இதனையடுத்து வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம், 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் ரூ 127 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது .152 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 
 

thirumavalavan

திருமாவளவன் சொத்து மதிப்பு என்ன.?

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் சொத்து பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், தனக்கு மொத்தமாக 2.5 கோடி மதிப்பிற்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையா சொத்து 49 லட்சத்திற்கும், அசையும் சொத்து 2 கோடியே 7 லட்சத்து 97ஆயிரம் ரூபாய் இருப்பதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் தனக்கு உள்ள 4 வங்கி கணக்கில் ஒன்றில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லையென  தெரிவித்துள்ளார்.
 

thirumavalavan

வங்கி கணக்கில் பணம் எவ்வளவு.?

மற்றொரு வங்கி கணக்கான இந்தியன் வங்கியில் 10 லட்சம் ரூபாய் பணமும், வேறொரு வங்கி கணக்கில் 3 லட்சம் மற்றும் 13ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சொந்தமாக 4 கார் மற்றும் ஒரு டெம்போ டிராவலர் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் குண்டு மணி தங்கம் மற்றும் வெள்ளி கூட இல்லையென தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

152 கோடி ரூபாய்க்கு சொத்து.. 10 அடுக்குமாடி குயிருப்பு.. ஆனா கார் மட்டும் இல்லை... மிரளவைக்கும் ஏ.சி.சண்முகம்

Latest Videos

click me!