152 கோடி ரூபாய்க்கு சொத்து.. 10 அடுக்குமாடி குயிருப்பு.. ஆனா கார் மட்டும் இல்லை... மிரளவைக்கும் ஏ.சி.சண்முகம்

First Published | Mar 27, 2024, 11:51 AM IST

2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏ.சி.சண்முகம் தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் ரூ 127 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது .152 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 
 

இன்றோடு நிறைவடையும் வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தல்  தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து முடித்துள்ளனர். அதில் தங்களது சொத்து மதிப்பு மற்றும் வழக்கு தொடர்பாக பின்னனியையும் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒரு சில வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தலை சுற்றுவைக்கிறது.

Aatral Ashokkumar

583 கோடி ரூபாய்க்கு சொத்து

அந்த வகையில், ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளரின் சொத்து தான் தற்போது வரை அதிகளவில் உள்ளது.ஆற்றல் அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 43 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளது. 

Tap to resize

vellore election

ஏசி சண்முகத்தின் சொத்து விவரம் என்ன.?

இதனையடுத்து வேலூர் தொகுதி வேட்பாளரான ஏசி சண்முகத்தின் சொத்து மதிப்பும் அதிகளவில் காட்டியுள்ளார். அந்த வகையில்,  தனக்கும் 152 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை, வைப்புத் தொகை, பங்கு முதலீடு, நகை என்று அசையும் சொத்துகளாக ஏ.சி.சண்முகத்திடம் ரூ 36 கோடியும் அவரது மனைவி லலிதா லட்சுமியிடம் ரூ 37 கோடியும் உள்ளது என தெரிவித்துள்ளார். 

AC Shanmugam

எத்தனை கிலோ தங்கம்.?

மேலும்  ஏ.சி.சண்முகம் கையிருப்பு தொகையாக ரூ 55,601 ரூபாயும், லலிதா லட்சுமியிடம் ரூ 85 ஆயிரம் ரூபாயும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கிக் கணக்குகளில் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ 94. 64 லட்சமும் லலிதா லட்சுமிக்கு ரூ 1.17 கோடியும் உள்ளது. ஏ.சி.சண்முகத்திடம் 2,105 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளியும் லலிதா லட்சுமியிடம் 3,837 கிராம் தங்கமும் ஒரு கிலோ வெள்ளியும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ac shanmugam

 சொத்து இருக்கு ஆனால் கார் இல்லை

ஏ.சி. சண்முகம் பெயரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 8 அடுக்குமாடி குடியிருப்புகளும் அவருடைய மனைவி பெயரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு  ரூ 17 கோடியே 72 லட்சமும் தனது மனைவிக்கு லலிதாவுக்கு ரூ 11 கோடியே 12 லட்சமும் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஏசி சண்முகம் தனக்கும் தனது மனைவி லலிதா பெயரில் எந்தவித கார்களும் இல்லையெனவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அடேங்கப்பா.. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos

click me!