பாரிவேந்தரின் சொத்து என்ன.?
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனது பெயரில் 59 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்படி பாரிவேந்தர் பெயரில் 20 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் 39 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளது.
பாரிவேந்தர் மனைவி பெயரில் 6 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் , 27.50 கோடி அசையா சொத்துகளும் உள்ளது. மேலும் பாரிவேந்தர் பெயரில் 4080 கிராம் நகைகளும், அவரது மனைவி பெயரில் 8040 கிராம் நகைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிவேந்தர் மற்றும் அவரது மனைவி இருவர் பெயரிலும் எந்தவித வாகனங்களும் இல்லை என்றும் வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள சொத்து பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.