மக்களவைத் தேர்தல் 2024: ஓட்டு போடுவதற்கு முன் இந்த 7 விஷயங்களைத் தெரிஞ்சுக்கோங்க!

First Published | Mar 7, 2024, 4:49 PM IST

2024 மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஓட்டு போட இருக்கும் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யும் முன்பு நினைவில் வைத்திருக்க வேண்டிய 7 விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது.

Lok Sabha Polls 2024

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் பின்னணி, கல்வி, பணி அனுபவம், பொதுச் சேவையில் அவர்கள் செய்தது என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Lok Sabha Election 2024

பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் படியுங்கள். தேசத்தின் முன்னேற்றத்திற்கான அவர்களின் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Latest Videos


Lok Sabha Election Voters 2024

வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள், கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மதிப்பீட்டில் எந்தக் கட்சி சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை பரிசீலித்து முடிவு செய்யுங்கள்.

Voters turn-around

உள்ளூர் மக்களைப் பாதிக்கும் குறிப்பிட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வேட்பாளரும் அவற்றை எவ்வாறு தீர்க்க திட்டமிட்டுள்ளனர் என்பதைத் தெரிந்துகொண்டு, யாரிடம் நல்ல திட்டம் உள்ளது என்பதை அறியுங்கள்.

General Elections 2024

வேட்பாளர்களிடம் தலைமைப் பண்பு இருக்கிறதா என்று மதிப்பிடுங்கள். நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டு வேட்பாளர் யார் என்று பாருங்கள்.

Elections 2024

வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள எதிர்காலத் திட்டங்கள் எப்படிப்பட்டவை, அவை தேசத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் திட்டங்களா என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள்.

Lok Sabha Polls

உங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள். அதிக வாக்குகள் பதிவாவது தான் அதிக மக்கள் பிரதிநிதித்துவத்துடன் உள்ள ஜனநாயகத்திற்கு அடையாளம்.

click me!